வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தந்தை.. கண்ணிமைக்கும் நொடியில் மகன் மரணம்
இடுக்கியில் உள்ள பன்னியர் ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. அப்போது புஞ்சகரை பகுதியை சேர்ந்த ராகுல் என்பவர் தனது குடும்பத்துடன் தண்ணீரை வேடிக்கை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, ராகுலின் மூன்றரை வயது மகன், ஆற்றின் கரையில் இருந்த பாறையில் ஏறி விளையாடும்போது, தடுமாறி ஆற்றில் விழுந்தார். உடனடியாக சிறுவனை உறவினர்கள் மீட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி சிறுவன் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.