நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின், பசுக்களுடன் தினமும் ஒருமணிநேரம் செலவிட விரும்புவதாக, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், 10 ஆண்டுகள் மதுரையில், நீதிபதியாக பணிபுரிந்துள்ள நிலையில், அவருக்கு மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. இதில், சில உருக்கமான தகவல்களை அவர் தெரிவித்தார்.