தீட்சிதர்கள் வாயில் இருந்து வந்த கேவலமான வார்த்தை..?நடுரோட்டில் முற்றிய சண்டை..பரபரப்பு காட்சிகள்
சிதம்பரத்தில் தம்பதியினரை கோவில் தீட்சிதர்கள் அவதூறாக பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலை சேர்ந்த 2 தீட்சிதர்கள், சாலை விதிகளை பின்பற்றாமல் நடந்து சென்றதால், அங்கிருந்த தம்பதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தீட்சிதர்கள், தம்பதியினரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையெதிர்த்து இளைஞர் ஒருவர் மடக்கிப் பிடித்து கேள்வி கேட்ட நிலையில், அவரிடம் தீட்சிதர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனையடுத்து மற்ற பொது தீட்சிதர்கள் அங்கு சென்று, இனிமேல் அப்படி பேச மாட்டார்கள் என தெரிவித்து செல்லும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.