பள்ளிக்குள் நடந்த அட்டூழியம் - இரவோடு இரவாக சுற்றி வளைத்த பொதுமக்கள்

Update: 2024-10-29 04:38 GMT

கடலூரில் பள்ளி வளாகத்திற்குள் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒப்பந்ததாரரின் வாகனங்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

சிதம்பரம் அருகே ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள 2 பழைய கட்டிடங்கள், பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின்பேரில் இடிக்கப்பட்டது. இதனை இடித்த ஒப்பந்ததாரர் பள்ளிக்குள் 5 அடி ஆழம் வரை தொண்டி மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த கிராம மக்கள், மணல் கடத்தலுக்கு பயன்பட்ட ஜேசிபி எந்திரம் மற்றும் லாரியை சிறை பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்