"கே.கே.நகர் தனியார் மண்டபத்துக்கு வாங்க..." - வாட்ஸ் அப் மெசேஜை நம்பிய மாணவர்களுக்கு பேரதிர்ச்சி

Update: 2024-07-22 09:25 GMT

சென்னை கே.கே.நகர் தனியார் மண்டபத்துக்கு வாங்க..." - வாட்ஸ் அப் மெசேஜை நம்பி பணத்தை கொட்டிய மாணவர்களுக்கு பேரதிர்ச்சி

சென்னையில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சிறந்த மருத்துவர்கள், சிறப்பு வகுப்பு எடுக்க உள்ளதாக கூறி சுமார் நான்கரை லட்சம் ரூபாய் மோசடி செய்த மருத்துவ மாணவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது...

சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் கதிர். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராமில், கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சிறந்த மருத்துவர்கள், சிறப்பு வகுப்பு எடுக்க உள்ளதாக விளம்பரம் செய்து உள்ளார். இதனை நம்பி மருத்துவம் பயிலும் மாணவர்கள் பலரும், கதிரை தொடர்பு கொண்ட நிலையில், கூகுள் பே மூலம் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் தலா ஆயிரத்து 800 ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். இறுதியாக, ஏமாற்றப்பட்டதை அறிந்த மாணவர்கள், வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றர்.

Tags:    

மேலும் செய்திகள்