திடீரென வீசிய சூறைக்காற்று.. சென்னையில் பயங்கர சத்தத்துடன் புரட்டி எடுத்த கனமழை
- வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மதுரை மாவட்டங்களில் நள்ளிரவில் பரவலாக கனமழை பெய்தது.
- ராணிப்பேட்டை, வாலாஜாப்பேட்டை, நெமிலி, கலவை, திமிரி, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் மாலை நேரத்தில் இடியுடன் பரவலாக மழை பெய்தது.
- மதுரையில் தெற்குவாசல், பெரியார் பேருந்து நிலையம், முனிச்சாலை, அனுப்பானடி, காளவாசல், பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் இடியுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. காமராஜர் சாலை, விளக்குத்தூண் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு திடீரென கன மழை வெளுத்து வாங்கியது.
- வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், சித்தூர் கேட், அம்பாபுரம், மேல் ஆலத்தூர், கூடநகரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. பட்டினம்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, கிண்டி, பல்லாவரம், அசோக் நகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.