"முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.." நேரடியாக வரும் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள்

Update: 2024-10-17 02:50 GMT

மழைநீர் தேங்கும் இடங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு ராட்சத பம்புகள் மூலம் மழை நீர் தேங்கிய இடங்களில் உடனடியாக நீர் வெளியேற்றப்பட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் தேதி முதல் தொடர்ந்து மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகாரிகள் கண்காணித்து வந்ததாகவும், வடகிழக்கு பருவமழை முடியும் வரை கண்காணிப்பு பணி தொடரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் மத்திய கைலாஷ், பெருங்குடி மற்றும் சிப்காட் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக்,இயக்குனர் அர்ஜுனன் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர். அவர்களுடன் மாநகராட்சி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்