குளம் போல் மாறிய பள்ளிக்கரணை.. "வேளச்சேரியிலிருந்து தண்ணீர் இங்கு வருகிறது" புலம்பும் சென்னை மக்கள்
சென்னை பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகரில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் வெள்ளநீரால் சூழ்ந்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து விட்டாலும், தங்கள் பகுதியில் வெள்ளநீர் தேங்கி இருப்பதாக கவலை தெரிவிக்கிறார்கள். வடிகால் வசதிகள் மேம்படுத்தப்பட்டு இருந்தாலும், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெள்ளநீர் தங்கள் பகுதிக்கு வருவதாகவும், தேங்கும் வெள்ளநீர் கடலுக்கு செல்ல கால்வாயை தூர்வாரி அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்கள்.