உயிரை மொத்தமாக மாய்த்து கொள்ள மெரினாவுக்கு வந்த கோவை பெண்..என்ன நடந்தது..? - போலீஸ் எடுத்த ஆக்ஷன்
உயிரை மொத்தமாக மாய்த்து கொள்ள மெரினாவுக்கு வந்த கோவை பெண்..என்ன நடந்தது..? - போலீஸ் எடுத்த ஆக்ஷன் - மகனால் உயிரை விடாமல் தவித்த பெண்
கந்து வட்டிக் கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்யும் அளவு துணிந்த நிலையில், கந்து வட்டிக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்...கோவை கண்ணப்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவரைப் பிரிந்து தனது 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்... அவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரிடம் இரண்டரை லட்சம் ரூபாய் 5 சதவீத வட்டிக்குக் கடன் வாங்கி சில மாதங்களாக வட்டி கட்டாத நிலையில் வட்டி பணத்தை திரும்ப கேட்ட விஜயகுமார் மிரட்டல் விடுத்ததால் அப்பெண் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் சென்னை சென்றுள்ளார்... உடன் மகன் இருந்ததால் அவரால் தற்கொலை செய்ய முடியவில்லை. சமூக ஆர்வலர் உதவியுடன்
தற்கொலை எண்ணத்தைக் கைவிட்ட அப்பெண் சென்னை போலீசார் உதவியுடன் மகனுடன் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்... இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில் போலிசார் விஜயகுமாரை கைது செய்தனர். இதனிடையே விஜயகுமார் வட்டி பணத்தை தர வேண்டாம் என கூறியதால் அப்பெண் விஜயகுமாரை கைது செய்ய வேண்டாம் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது...