தனிப்பட்ட விரோதம் காரணமாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், பவானி நதியில் சட்டவிரோதமாக தண்ணீரை எடுத்து விற்று வருவதாக தனியார் நிறுவனத்திற்கு எதிராக செல்வராஜ் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்கும், அந்த நிறுவனத்துக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்னை உள்ளதாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தனிப்பட்ட விரோதத்தை தீர்த்துக் கொள்ள பொதுநல வழக்கை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
அதேசமயம், பவானி நதியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்து வர்த்தக ரீதியில் பயன்படுத்தியது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.