கிரடாய் மற்றும் 3 கட்டுமான நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்களின் வழிகாட்டி மதிப்பீடு சுற்றறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வு, சுற்றறிக்கையை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, கிரடாய் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.https://youtu.be/-GxYiivgXpM