போக்சோவில் சிக்கிய குற்றவாளி... கோர்ட்டில் மகன் போட்ட மனு... நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
போக்சோ வழக்கில் தண்டிக்கப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டவருக்கு, தனியார் மருத்துவமனையில், இதய அறுவை சிகிச்சை செய்ய மூன்று மாத கால விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி அவரது மகன் உயர்நீதிமன்றத்தில் மனு போட்டிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கோரிக்கையை நீதிபதிகள் மறுத்தனர். மேலும், ஸ்டான்லி மருத்துவமனை பெயர் பெற்ற மருத்துவமனை என்பதால் அங்கு இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்புக்காக செல்லும் மனுதாரருக்கோ, தாய்க்கோ எந்த கட்டுப்பாடுகளும் விதிக்க கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் .