லஞ்ச குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு ஊழியர், தனது சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யும் வழக்குகளில், லஞ்ச வழக்கை விசாரிக்கும் புலன் விசாரணை அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்ப்பதில் எந்த தவறும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.லஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதயகுமார் என்பவர், தனது சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, லஞ்ச வழக்கை விசாரிக்கும் புலன் விசாரணை அதிகாரியை வழக்கில் சேர்க்க மனுதாரர் தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது. இந்த ஆட்சேபத்தை ஏற்க மறுத்த நீதிபதி, சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளில், குற்ற வழக்கை விரைந்து முடிக்க புலன் விசாரணை அதிகாரியை எதிர் மனுதாரராக சேர்ப்பதில் எந்த தவறும் இல்லை என குறிப்பிட்டார்.