"இதை செய்யாதீர்கள்.." வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள்..! மக்களே வெளியான முக்கிய தகவல்
சென்னை வேளச்சேரி, மடிப்பாக்கம், தரமணியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இருசக்கர வாகன ஷோரூம்களுக்கு வாகன ஓட்டிகள் படையெடுத்துள்ளனர்...
கடந்த 2 நாட்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் நாளொன்றிற்கு 100 வரை வருவதாகவும், 12 மணி நேரத்திற்கும் மேலாக பணியாற்றி இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கப்படுவதாகவும் ஷோரூம்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையில் வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க வேண்டாம் எனவும் உடனடியாக சர்வீஸ் சென்டர்களில் விடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளான இருசக்கர வாகனங்களை முறையான பராமரிப்பின்றி இயக்கத் தொடங்கினால் இன்ஜின் பழுதடையும் அபாயம் ஏற்படுவதுடன், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்ய நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... இருசக்கர வாகன நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வெள்ள பாதிப்பு சலுகைகளை அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இருசக்கர வாகன காப்பீட்டு நிறுவனங்கள் வெள்ள பாதிப்பு வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடுகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.