"வெள்ள நிவாரண தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கிடுக" - தமிழ்நாடு அரசுக்கு செ.கு.தமிழரசன் வலியுறுத்தல்
"வெள்ள நிவாரண தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கிடுக" - தமிழ்நாடு அரசுக்கு செ.கு.தமிழரசன் வலியுறுத்தல்
வெள்ள நிவாரண தொகையை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமென, இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் வலியுறுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டம் அரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனிவரும் காலங்களில் மழைநீரை வெளியேற்றுவதற்கான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு முறையாக திட்டமிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.