சென்னை வளசரவாக்கம் அருகே உள்ள அரசு பள்ளியில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. ஆலப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், மின்மோட்டார் மற்றும் டிராக்டர் மூலமாக தண்ணீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தண்ணீர் விரைவில் வெளியேற்றப்பட்டு வழக்கம் போல் பள்ளிகள் இயங்க தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.