மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்... சென்னையை அடுத்த ஆலந்தூர் மாரிசன் தெரு, ஆதம்பாக்கம், பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓபிஎஸ் நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்...