"யோவ் கை வைக்காத.. கைய எடுய்யா ண்ணோவ் என் மேல 40 கேஸ் இருக்கு".. போலீசையே மிரட்டிய சைக்கோ சரண்..

Update: 2024-06-10 05:37 GMT

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவை ரவுடிகள் அடித்து நொறுக்கியுள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த வழக்கில் மயிலாப்பூரை சேர்ந்த சைக்கோ சரண், மந்தைவெளியை சேர்ந்த போண்டா ராஜேஷ் மற்றும் தினேஷ் ஆகிய மூன்று ரவுடிகளை அபிராமபுரம் போலீசார் கைது செய்திருந்தனர். இவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக போலீசார் அழைத்து சென்றனர். அப்போது, அங்கு வந்த ரவுடிகளின் கூட்டாளிகள் அவர்களை விடுதலை செய்ய கோரி, மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவை அடித்து நொறுக்கி உள்ளனர். மேலும், மூவரையும் விடுவிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வோம் எனக் கூறி, பிளேடுகளால் கைகளை அறுத்துக் கொண்டும் போலீசாரை மிரட்டியுள்ளனர். பிறகு அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றுள்ளனர். மருத்துவமனையை சேதப்படுத்தி தப்பி சென்றவர்களை ராயப்பேட்டை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்