திமுக கூட்டணி உறுப்பினர்கள் திடீர் எதிர்ப்பு...ஷாக்கில் மேயர் பிரியா.. பரபரப்பான மாநகராட்சி கூட்டம்

Update: 2024-08-30 06:59 GMT

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பால் சில தீர்மானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மொத்தம் 54 தீர்மானங்கள் முன்மொழியப்பட்ட நிலையில், தீர்மானம் எண் 30,37,38 மற்றும் 39 ஆகியவற்றுக்கு திமுக கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதாவது, அயனாவரம் வசந்தா கார்டனில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை போதுமான மாணவர்கள் இல்லை எனக் கூறி மூடும் முடிவுக்கும், திடக்கழிவு மேலாண்மையை தனியாருக்கு வழங்கவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திடக்கழிவு மேலாண்மை ஏற்கெனவே உள்ள திட்டம் என்பதால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்று மேயர் கூறியதால், திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்