செப்டம்பருக்கு ஜம்ப்பான`மே'... சதமடித்த சூரியன் - தலைகீழான இயற்கை - ``இனிமேல்'' ஷாக் ரிப்போர்ட்...

Update: 2024-09-16 12:32 GMT

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் செப்டம்பர் மாதத்தில் உச்சபட்ச வெப்பம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பார்க்கலாம் விரிவாக...

அடிக்கும் வெயிலை பார்த்தால் செப்டம்பர் மாதமா அல்லது மே மாதமா என சிந்திக்கும் அளவிற்கு கொளுத்தி வருகிறது வெயில்..

தற்போது தமிழகம் மழைக்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் சூழலில், கோடையின் தாக்கம் குறையவில்லை என்றே சொல்லலாம்...ஆம், அந்த அளவிற்கு கோர முகத்தை காட்டி வருகிறார் சூரிய பகவான்..

இதற்கு சமீபத்தில் பதிவான வெப்ப அளவுகள் சாட்சியாக உள்ளன.

முன்னதாக கடந்த ஞாயிறன்று மதுரை விமான நிலையம், மதுரை நகர், தூத்துக்குடி, நாகப்பட்டினம், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியிருந்தது.

அதே போல் சென்னையில் பல இடங்களில் வெயில் சுட்டெரித்த நிலையில், நுங்கம்பாக்கத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை சுட்டிக்காட்டும் வானிலை ஆய்வாளர்கள், செப்டம்பர் மாதத்தில் கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்த வெப்பத்தின் காரணமாக மக்கள் பல அசௌகரியத்தால் அவதிக்கு ஆளாகினர்.

இப்பவே கண்ணை கட்டுதே என வெப்பத்தால் வெதும்பியுள்ள சூழலில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 19ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குளிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்..

Tags:    

மேலும் செய்திகள்