புதுப்பொலிவுடன் மெரினாவில் பிரமாண்டம்... தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Update: 2024-10-09 03:19 GMT

புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மெரினா நீச்சல் குளம் உள்ளது. தனியார் பராமரிப்பில் விடப்பட்டிருந்த நீச்சல் குளமானது, தற்போது புதுப்பிக்கப்பட்டு சென்னை மாநகராட்சியால் நேரடியாக பராமரித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.100 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட நீச்சல் குளமானது, 3.5 முதல் 5 அடி வரை ஆழம் கொண்டுள்ளது. நீச்சல் குளமானது காலை 5.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை செயல்படும் எனவும், காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை பெண்களுக்கான நேரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்தல் மற்றும் கட்டணம் செலுத்துவதற்காக QR Code உருவாக்கப்பட்டுள்ளது.1 மணி நேரத்திற்கு பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறுவர்களுக்கு 30 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு சிறப்புச் சலுகையாக கட்டணத்தில் இருந்து 5 ரூபாய் குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளமானது, பராமரிப்புப் பணி காரணமாக திங்கள்தோறும் வார விடுமுறை விடப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்