14 வயது சிறுமி கொடூர மரணம்.. பகீர் வாக்குமூலம் கொடுத்த பெண்
சென்னை அமைந்தக்கரையில் 14 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானப் பெண், தனது கணவரின் பார்வை சிறுமியின் பக்கம் திரும்பியதால் சித்ரவதை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்..
சென்னை அமைந்தகரை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றில் 14 வயது சிறுமி, கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் முகமது நவாஸ், அவரது மனைவி நாசியா உள்ளிட்ட 6 பேரையும் அமைந்தகரை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 6 பேரையும் நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கணவரின் பார்வை சிறுமி மீது திரும்பியதால், ஆத்திரத்தில் சிறுமியை அடித்து துன்புறுத்தியதாக முகமது நவாஷின் மனைவி நாசிய போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..