ரயிலில் IT ரெய்டா? தெறித்து ஓடிய பயணி - மடக்கிய போலீஸ்.. கடைசியில் மெகா ட்விஸ்ட்
ஆந்திராவை சேர்ந்த நந்தன் கிஷோர், தங்கம் வாங்குவதற்காக, 32 லட்சம் ரூபாய் பணத்துடன் சென்னை வந்துள்ளார். ரயிலில் வந்த அவரிடம், தான் வருமான வரித்துறை அதிகாரி என்றும், பணத்தில் 50 ஆயிரம் ரூபாயை கொடுத்தால் விட்டு விடுகிறேன் என்றும் ஒரு நபர் தெரிவித்துள்ளார். அவர் மோசடிக்காரர் என்பதை தெரிந்து கொண்ட நந்தன் கிஷோர், ஓடும் ரயிலில் இருந்து குதித்து ஓடியுள்ளார். அந்த போலி வரித்துறை அதிகாரியும் பின் தொடர்ந்துள்ளார். அப்போது, நந்தன் கிஷோர் ஒரு ஆட்டோவில் ஏறி தப்ப முயன்றுள்ளார். இந்நிலையில், நந்தன் கிஷோர், பணத்திற்கான உரிய ஆவணத்தை வைத்திருக்க மாட்டார் எனக்கருதிய போலி வரித்துறை அதிகாரி, திருடன்... திருடன்.. என கத்தியுள்ளார். அருகே இருந்த சேத்துப்பட்டு போலீசார் ஆட்டோவை மடக்கி, நந்தன் கிஷோரை பிடித்தனர். உண்மை தெரிந்தவுடன் போலி வரித்துறை அதிகாரியும் கைது செய்யப்பட்டார். இருவரிடமும் சேத்துப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.