சென்னை பட்டினம்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த புதுமண தம்பதியர்கள் நேதாஜி மற்றும் பர்வீன்.
நேதாஜி ஈஸ்வரன், டிடி ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றி உள்ளார்.
நேற்றிரவு அவரது வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட திருடர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 2 லட்சம் பணம், பட்டுப்புடவைகள், மொய்பணம் மற்றும் 8 சவரன் நகைகள் திருடி சென்றுள்ளனர்.
இதே போல, அந்த பகுதியில் உள்ள செந்தில் குமார் என்பவர் வீட்டை திறந்து வைத்துவிட்டு தூங்கிய போது, 95 ஆயிரம் பணம், 1 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசு உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன. இப்படி அடுத்தடுத்து இருந்த ஐந்து வீடுகளில் திருடர்கள் வரிசையாக கைவரிசை காட்டி, மூன்று லட்ச ரூபாய் பணம் மற்றும் 10 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். திருட்டு சம்பவம் தொடர்பாக பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.