சென்னை ஜாஃபர்கான் பேட்டை பகுதியில் உள்ள பிரபல
திரையரங்கான காசி தியாட்டரில், சேவை வரி ஏய்ப்பு
நடைபெறுவதாக ஜி.எஸ்.டி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதனை அடுத்து 4 பேர் கொண்ட ஜிஎஸ்டி அதிகாரிகள்
நேற்று இரவு காசி தியேட்டரில் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக வரி செலுத்தாமல் இருந்ததாக புகார் வந்த ஆண்டில் வாங்கப்பட்ட திரைபடங்கள் பற்றியும், அதற்கு அளிக்கப்பட்ட அட்வான்ஸ் தொகைகள் பற்றியம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அலுவலகத்தில் இருந்து பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பின்னர், சேவை வரி ஏய்ப்பு
புகார் தொடர்பாக காசி தியேட்டர் உரிமையாளர் விஷ்ணுவர்தனை ஜிஎஸ்டி அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னரே வரி ஏய்ப்பு குறித்த தகவல்கள் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.