கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் இருந்து நீர்வரத்து இல்லாத காரணத்தினால் கடந்த பல மாதங்களாக வீராணம் ஏறி வறண்டு கிடந்தது. இந்த நிலையில், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். அதன்படி கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்று வழியாக கீழணைக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து கீழணையில் இருந்து விநாடிக்கு 200 கன அடி வீதம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது வந்தடைந்தது. வீராணம் ஏரி 10 நாளில் பாதியளவு நிரம்பியதும், சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி துவங்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.