தீபாவளியை தொடங்கிய வடமாநிலத்தவர்கள்.. புதுக்கணக்கை தொடங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தீபாவளியை தொடங்கிய வடமாநிலத்தவர்கள்.. புதுக்கணக்கை தொடங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
சென்னையில் தீபாவளி பண்டிகையின் தொடர்ச்சியாக அமாவாசையை முன்னிட்டு வடமாநிலத்தவர்கள் தங்கள் கடைகளில் புது கணக்கு தொடங்கும் நிகழ்வை தொடர்ந்து தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடினர். தீபாவளி பண்டிகையை தமிழகத்தில் ஒரு நாள் விழாவாக கொண்டாடி வரும் நிலையில், வடமாநிலங்களில் 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். சென்னையில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள், தீபாவளிக்கு மறுநாள் அமாவாசையும் வந்ததால், அந்த நாளில் தங்கள் கடைகள் அல்லது நிறுவனங்களில் புதுக்கணக்கை தொடங்கினர், அதைத் தொடர்ந்து, வீதிகளில் பட்டாசு வெடித்து தீபாவளியை அவர்கள் கொண்டாடினர்.