OTT தளத்தை தடை செய்ய வேண்டும்.. - கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் போராட்டம்

Update: 2024-10-23 17:04 GMT

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே மத்திய அரசை வலியுறுத்தி தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்லப் பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக அரசியல் ஆய்வு மைய செயலாளர் அந்தரிதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்... சேனல் விலை 19 ரூபாய் என்பதை குறைத்து 5 ரூபாயாக மாற்றி அமைக்க வேண்டும், சேனல் தொகுப்புகளின் விலையை ஆண்டுதோறும் உயர்த்தி கொள்வதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும், கேபிள் டிவிக்கு விதித்துள்ள 18 சதவீத ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், OTT தளத்தை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டம் நடைபெற்றது... மத்திய அரசு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 1 மணி நேரம் கேபிள் டிவி செயலாக்கத்தை நிறுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவிக்க திட்டமிட்டு இருப்பதாக தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர் பொதுநல சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்