துன்புறுத்திய கணவன்..! கத்தியால் சரமாரியாக வெட்டிய மாணவி.. சென்னையில் பரபரப்பு | Chennai
நசரத்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மங்கள லட்சுமி ஊர் காவல் படையில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். குடிப்பழக்கம் உடைய சீனிவாசன், குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சனிக்கிழமை குடிபோதையில் வந்த சீனிவாசன் மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மங்களலட்சுமி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவரின் வயிற்றில் குத்தியுள்ளார். ரத்தக்காயம் அடைந்த சீனிவாசன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மனைவி மங்கள லட்சுமியை போலீசார் கைது செய்தனர்.