சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள், மூன்று வழித்தடங்களில் 69 ஆயிரத்து 180 கோடி ரூபாய் செலவில், 116 கி.மீ., துாரம் நடந்து வருகின்றன. இதையடுத்து, தாம்பரம்-வேளச்சேரி- கிண்டி வரை புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வழித்தடங்கள், போக்கு வரத்து நெரிசல், செலவுகள் உள்ளிட்டவை குறித்து முழு விபரங்கள், அதில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. விரைவில் அரசிடம் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாம்பரம் வேளச்சேரி வழியாக கிண்டிக்கு வரும் இந்த புதிய வழித்தடத்தை, கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் இணைப்பதா அல்லது சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இணைப்பதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.