சென்னை மாநகராட்சியின் பெண் தபேதார் மீது ஆக்க்ஷன்...லிப்ஸ்டிக் காரணமா? மேயர் பிரியா பரபர விளக்கம்

Update: 2024-09-25 10:20 GMT

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் மீது ஆக்க்ஷன் ... லிப்ஸ்டிக் காரணமா..? மேயர் பிரியா பரபர விளக்கம்

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதாராக நியமிக்கப்பட்ட மாதவி, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மணலி மண்டல அலுவலகத்திற்கு அவர் பணியிடம் மாற்றப்பட்டுள்ளார். பணியில் அலட்சியம், உரிய நேரத்தில் பணிக்கு வராதது, அலுவலக உத்தரவை பின்பற்றாதது ஆகிய காரணங்களால் மாதவி மாற்றப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பணியிட மாற்றம் குறித்து பேசியுள்ள மாதவி, லிப்ஸ்டிக் பூசி பணிக்கு வரக் கூடாது என்ற உத்தரவை மீறியதால் தண்டிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக, ஆகஸ்ட் 6ஆம் தேதி அளிக்கப்பட்ட மெமோவுக்கு தாம் பதிலளித்திருப்பதாகவும், நான் பணி நேரத்தில் வேலை செய்யாமல் இருந்தால் மட்டுமே மெமோ பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, டபேதார் மாதவியின் இடமாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் விவாகரத்துக்கும் சம்பந்தமில்லை என்று கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்