சென்னையில் 55 ரயில்கள் ரத்து கடும் நெரிசலால் ஸ்தம்பிக்கும் GST "4 மணி நேரம் ஆகிறது"..தவிக்கும் மக்கள்

Update: 2024-08-06 10:24 GMT

சென்னை, தாம்பரம் பணிமனை சீரமைப்பு பணிகள், சிக்னல் மேம்பாட்டு பணிகள் காரணமாக கடந்த 3ம் தேதி முதல் சென்னை கடற்கரை, செங்கல்ப்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை - பல்லாவரம் , செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையே மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேரடி ரயில் சேவை இல்லாததால் குரோம்பேட்டை, தாம்பரம் பெருங்களத்தூர் வண்டலூர் உள்ளிட்ட ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், 70க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும், நெரிசலின் காரணமாக மக்கள் தடுமாற்றத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்