கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக கதறிய சென்னை இளம் பெண்ணுக்கு... போலீஸ் ஸ்டேஷனில் நடந்த அதிர்ச்சி?

Update: 2024-09-01 10:25 GMT

கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக கதறிய சென்னை இளம் பெண்ணுக்கு... போலீஸ் ஸ்டேஷனில் நடந்த அதிர்ச்சி? தீயாய் பரவும் ஆடியோ

லஞ்சம் கொடுத்ததை எல்லோரிடமும் கூறியதால் கொடுத்த பணத்தை திரும்ப வாங்கிக்கொள்ளுமாறு காவல் ஆய்வாளர் கூறும் வீடியோ வலைதளத்தில் பரவி வரகிறது.

சென்னை பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவர் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய மணிபாலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி, அதற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. புகார் மீது ஆய்வாளர் சுமதி எந்த நடவடிக்கை எடுக்காததால் திவ்யா குடும்ப நல நீதிமன்றம் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் மனு அளித்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த சுமதி, தான் பணம் வங்கியதை எல்லோரிடமும் சொல்ல விட்டதாக கூறி 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறி திவ்யாவிடம் கூறிய ஆடியோ இணையத்தில் உலா வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்