300 பேர்.. 5 கோடி ரூபாய்.. பேசி.. பேசி.. ஆட்டைய போட்ட பட்டதாரிகள்.. அதிரடி காட்டிய சென்னை போலீஸ்
சென்னை மணலியை சேர்ந்த பாலாஜி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், சென்னை ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் ஆன்லைன் ரேடிங் நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக விளம்பரம் செய்து, தன்னை மட்டுமல்லாமல், பலரிடம் சுமார் 88 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தை நடத்தி வந்த பொறியியல் பட்டதாரிகள், சுமார் 300 பேரிடம் இருந்து 5 கோடி ரூபாய்க்கு பணத்தை பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இதுதொடர்பாக தினேஷ்குமார், பிரேம் கிருபால், திலீப் குமார், அருண் குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செயது சிறையில் அடைத்தனர்.