யூடியூப் மூலமாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கடந்த மே மாதம் ஆறு பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராயப்பேட்டை ஜானி ஜான்கான் தெருவில் ஒரு அறக்கட்டளை நடத்தி அதன் மூலமாக தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்சேர்ப்பு பிரசங்கம் நடத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 6 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், இந்த வழக்கானது என்.ஐ.ஏ.விற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ராயப்பேட்டையில் டிரஸ்ட் இயங்கி வந்த இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர். அங்கு பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட யூடியூப் மற்றும் whatsapp குரூப் களை ஆய்வு செய்து வருகின்றனர்.