சென்னையில் மனைவிக்கே தெரியாமல் அவர் போனை வைத்து தீவிரவாத தலைவர் நிகழ்த்தவிருந்த பயங்கரம்?

Update: 2024-10-11 03:16 GMT

பயங்கரவாத இயக்க செயல்பாடு விவகாரத்தில் சென்னையில் கைது செய்யப்பட்டவர் மனைவி செல்போனை தேசிய புலனாய்வு பிரிவு பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிஸ்ப்-உத் தஹ்ரிர் பயங்கரவாத அமைப்பின் தமிழக பிரிவு தலைவராக செயல்பட்ட ஃபைசுல் ரஹ்மான் கைதை அடுத்து விசாரணை தீவிரமாகியிருக்கிறது. பயங்கரவாத செயல் தொடர்பான வழக்கில் மே மாதம் கைது செய்யப்பட்ட மன்சூர் வீட்டில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி சோதனையை நடத்தினர். சென்னை தரமணி எத்திராஜ் தெருவில் மன்சூர் வீட்டிற்கு வந்த என்ஐஏ அதிகாரிகளை வீட்டில் சோதனையிட அவரது மனைவி முதலில் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவு சோதனையிட்டதில் மன்சூர், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆட்களை திரட்டவும், இயக்கத்தின் ஆதரவாளர்களிடம் பேசவும் தனது மனைவியின் செல்போனை பயன்படுத்தி வந்தது தெரியவந்ததாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. விசாரணையை மேற்கொள்ள செல்போன் உள்ளிட்ட சில ஆவணங்களை அவர்கள் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்