சென்னை மெரினாவில் பெரும் சோகம்...பூதம்போல் எழுந்து வாரிச்சுருட்டி உயிர் காவு வாங்கிய கடல்

Update: 2024-10-18 07:45 GMT

சென்னை மெரினாவில் பெரும் சோகம்... பூதம்போல் எழுந்து வாரிச்சுருட்டி உயிர் காவு வாங்கிய கடல் - ஓயாமல் கேட்ட கதறல் சத்தம்

எச்சரிக்கையை மீறி, சென்னை மெரினா கடற்கரைக்கு நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் ஒருவர்... கடல் சீற்றம் காரணமாக ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது...

பேரிடரில் இருந்து நூலிழையில் தப்பி, சென்னைவாசிகள் ஆசுவாசம் கொள்ளும் நேரத்தில்தான் இந்த துயரம்...

தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னையில் கனமழை கொட்டித் தீர்க்கும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், சென்னைவாசிகள் நூலிழையில் கண்டம் தப்பினர்..

இருப்பினும் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், கடலில் அலைகளின் சீற்றம் அதிகம் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வந்த நிலையில், அதை பொருட்படுத்தாமல் மெரினா கடற்கரைக்கு சென்றவர்களுக்கு தான் இந்த விபரீதம்...

சென்னை மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் கல்லூரி மாணவர்கள் ஏழு பேர், கடற்கரைக்கு குளிக்க சென்ற நிலையில், அவர்களின் இருவரை வாரி சுருட்டிய கடல் சீற்றம் அதில் ஒருவரின் உயிரை விழுங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..

கடற்கரையில் இருந்த போலீசாரின் பேச்சை மீறி மாணவர்கள் குளித்ததில், சென்னையைச் சேர்ந்த கவியரசன் மற்றும் ஆதி ஆகிய இரண்டு மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளனர்...

இதில், கவியரசனை சடலமாக மீட்ட மீட்பு குழுவினர், மற்றொரு மாணவரான ஆதியை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு சிகிச்சையில் அனுமதித்திருக்கின்றனர்..

பேரிடர் கால விழிப்புணர்வையும், எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத கல்லூரி மாணவர்களின் இந்த விளையாட்டுத் தனம் விபரீதமாகி ஒரு உயிர் பறிபோயிருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்