காதலால் மன உளைச்சல்? - மாணவி எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் அதிர்ச்சி

Update: 2024-08-19 02:11 GMT

சென்னை, மதுரவாயலில் கல்லூரி மாணவி ஒருவர்... காதல் விவகாரத்தில் த*கொ*ல செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, மதுரவாயல் கண்ணன் நகரை சேர்ந்தவர் சுவாதி. 19 வயதான இவர், தன் பாட்டியின் வீட்டில் வசித்து வந்தார். இவரின் பெற்றோர் பூந்தமல்லியில் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த சுவாதி, தன் பாட்டியின் வீட்டில் திடீரென த*கொ*ல செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தில் மன உளைச்சல் இருந்த மாணவி த*கொ*ல செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்