சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழும அலுவலகத்தில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள,பெரு நகர வளர்ச்சிக்குழுமம் அலுவலகத்திலும் அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.