போலீஸ் டோனில் வந்த குரல் ..நடுங்கிய சென்னை மெடிக்கல் ஓனர் - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி
சென்னை அயனாவரத்தில் போலீஸ் எனக் கூறி மருந்தக உரிமையாளரைக் கடத்திச்சென்று பணம் பறித்த சம்பவத்தில் ஊர்க்காவல் படை வீரர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.அயனாவரம் பரசுராம ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன். வீட்டின் அருகே ஸ்ரீவிநாயகா மருந்து கடை நடத்திவருகிறார். கடந்த 28-ம் தேதி மாலை 4 மணியளவில் இவரது கடைக்கு வந்த மர்மநபர்கள், போதை மாத்திரைகள் விற்கிறாயா? எனக் கூறி மிரட்டி, கல்லாப் பெட்டியில் இருந்த 7,000 ரூபாயை எடுத்ததுடன் அவரையும் மிரட்டி இருசக்கர வாகனத்தில் கொளத்தூருக்கு கடத்திச் சென்றனர். அங்கு வைத்து 80,000 ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். தனக்கு தெரிந்த நபர்களிடம் பேசி 60,000 வரை வாங்கி கொடுத்துள்ளார் பிரபாகரன். பணத்தை வாங்கிக் கொண்ட மர்ம நபர்கள், பிரபாகரனை மீண்டும் அயனாவரத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.
இதுதொடர்பாக பிரபாகரன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து, ராஜமங்கலம் காவல் நிலைய த்தில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றும் தினகரன் மற்றும் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இம்ரான் ஆகிய இருவரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.