இன்ஸ்டாவில் முளைத்த காதல்... பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டல் - போக்சோவில் கைதான காதலன்

Update: 2024-03-15 02:36 GMT

சென்னை அருகே திருநின்றவூரைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு, இன்ஸ்டாகிராம் வாயிலாக அரியலூரைச் சேர்ந்த அருண்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறிய அருண்குமார், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் சிறுமியிடம் இருந்து ஒரு சவரன் தங்க நகை மற்றும் சிறுமியின் அம்மாவுக்கு தெரியாமல் ஏ.டி.எம். கார்டில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அருண்குமார் எடுத்துள்ளார். மேலும், நடந்தவற்றை வெளியில் சொன்னால், தாய் மற்றும் தம்பியை கொலை செய்து விடுவதாகக் கூறி, அருண் குமார் சிறுமியை மிரட்டியுள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் தாய்க்கு தெரியவர, புகாரின் பேரில் அருண்குமாரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்