வெளிநாட்டிற்கு வேலைக்கு அழைத்து சென்று செய்த காரியம் - சென்னையில் கதறிய பெண்

Update: 2024-05-31 11:49 GMT

வெளிநாட்டிலுள்ள ஹோட்டல்களில் நடனமாடும் வேலைக்கு பெண்களை அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டுக்கு அழைத்து சென்று தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக ஒரு கும்பல் மீது பாதிக்கப்பட்ட பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். வறுமையில் இருக்கும் பெண்களை குறிவைத்து குற்றம் நடப்பதாக புகாரில் கூறியிருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த விபசார தடுப்பு பிரிவு போலீசார், பெண்களை வெளிநாடு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பிரகாஷ் ராஜ், ஜெயகுமார், ஆஃபியா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பாதிக்கப்பட்ட பெண்களின் கடன் மற்றும் ஒப்பந்த பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கில் தொடர்புடைய 4 முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்