`சுகத்திற்காக ஊசி' - 22 வயது இளைஞர் செய்த பகீர் - நிர்கதியாக மனைவி

Update: 2024-08-02 09:01 GMT

`சுகத்திற்காக ஊசி' - 22 வயது இளைஞர் செய்த பகீர் - நிர்கதியாக மனைவி

கொளத்தூர், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் ஆர்யா. 19 வயது இளைஞரான இவர், சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த தன் நண்பர்களுடன் சேர்ந்து உடலில் போதை ஊசி செலுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, புளியந்தோப்பு கனகராஜ் தோட்டம் பகுதியை சேர்ந்த

பாஸ்கர் என்பவரும் உடலில் போதை ஊசி செலுத்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில், பெயிண்டிங் மற்றும் கட்டிட தொழிலாளியான 22 வயது இளைஞர் பாஸ்கருக்கு, 20 வயது இளம் பெண்ணுடன் திருமணமானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்