சென்னையை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை.. இடம் மாறப்போகும் கைதிகள்

Update: 2024-07-16 15:29 GMT

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வந்த கைதிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கின் கைதிகளான 10 பேரின் ஐந்து நாள் போலீஸ் காவல் விசாரணை இன்றுடன் முடிவடைவதால், காணொலி மூலம் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இந்நிலையில், கைதிகள் அனைவரும் தனி வேன் மூலம் மருத்துவ பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பரிசோதனை முடிந்து மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்