நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக மனுதாரரின் வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறையில் ஊழல் நடைப்பதாகவும், விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும், கண்ணன் சுவாமிநாதன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, காணொலி காட்சி மூலம் ஆஜரான மனுதாரர், விசாரணையை நடத்த விடாமல் தொடர்ந்து இடையூறு செய்து கூச்சலிட்டார். இதனையடுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.