பரிதாபமாக பலியான 5 வயது குழந்தை.. எதிர் பாராமல் நடந்த துயரம். 4 பேர் மீது பாய்ந்த வழக்கு | Thanthitv

Update: 2024-06-16 14:40 GMT

ஒடிசாவை சேர்ந்த தம்பதி கிருஷ்ணன் - தக்‌ஷனா. தம்பதிக்கு 5 மற்றும் 7 வயதில் இரு குழந்தைகள் உள்ள நிலையில், கட்டட வேலைக்காக சென்னைக்கு வந்து கொண்டித்தோப்பு பகுதியில் தங்கி இருக்கின்றனர். சம்பவத்தன்று, தம்பதியின் இரு குழந்தைகளும் கட்டடத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நிலையில், 5 வயது குழந்தையான ஸ்ருதி நீர் தேக்க தொட்டிக்குள் தவறி விழுந்திருக்கிறது. அனைவரும் கட்டட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்ததால், குழந்தையை யாரும் கவனிக்காத நிலையில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி கட்ட உரிமையாளர் மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் உட்பட நால்வர் மீது போலீசர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்