மூன்றே நாள்களில் புற்றுநோயிலிருந்து விடுதலை... நிகழ்ந்தது அதிசயம்! சாதித்த சென்னை மருத்துவமனை
மூன்றே நாள்களில் புற்றுநோயிலிருந்து விடுதலை... நிகழ்ந்தது அதிசயம்! சாதித்த சென்னை மருத்துவமனை
மூளைக்கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மூன்றே நாள்களில் நோயாளியை இயல்பு நிலைக்குத் திரும்ப வைத்து சென்னை தனியார் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
மருத்துவ உலகில் மூளையில் ஏற்படும் கட்டியை அகற்றுவது மிக சவாலான அறுவை சிகிச்சைகள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 44 வயது பெண்ணுக்கு மூளையின் அடித்தளமான டாமினன்ட் பக்க இன்சுலார் மடல் என்ற பகுதியில் கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. அக்கட்டியை டிரான்ஸ்பர்மேட்டிவ் கீஹோல் அணுகுமுறை மூலம் திறம்பட அகற்றி மூன்றே நாள்களுக்குள் அப்பெண் இயல்பான நிலையைத் தொடரும் வகையில் தனியார் மருத்துவமனையின் கேன்சர் மைய மருத்துவ குழுவினர்அசத்தியுள்ளனர்.
செரிபல் கார்டெக்ஸ் எனும் மூளையின் ஆழமான இன்சுலார் பகுதியில் கண்டறியப்பட்ட கட்டியை உலகிலேயே முதன்முதலாக பாதுகாப்பாக அகற்றி 44 வயது பெண்ணின் உயிரை காப்பாற்றி அந்த மருத்துவக் குழு சாதனை படைத்துள்ளது.
புருவப் பகுதியில் ஒரு சிறிய கீறலை மேற்கொண்டு மூளையின் ஆழமான பகுதிக்குள் உருவாகி இருந்த புற்றுநோய் கட்டியை அகற்றி இருப்பதாகவும், சந்திரனின் தென்துருவத்தில் சந்திரயான் தரையிறங்கியதைப் போல, மூளையின் ஆழமான பகுதிக்கு மெல்லிய துளை வழியே ஊடுருவிச் சென்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.