சென்னையில் லோன் வாங்கியவருக்கு நேர்ந்த கொடுமை? - கடிதம் எழுதி வைத்து உயிரையே விட்ட சோகம்

Update: 2024-03-21 08:19 GMT

சென்னையில் லோன் வாங்கியவருக்கு நேர்ந்த கொடுமை? - கடிதம் எழுதி வைத்து உயிரையே விட்ட சோகம்

கடன் தொல்லையால் இரும்பு வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

சென்னை முத்தையால்பேட்டை பிடாரி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ். 63 வயதான இவர், வண்ணாரப்பேட்டை பகுதியில் இரும்பு பிளேட் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், வியாபாரத்திற்காக அவர் தனியார் வங்கி ஒன்றில் ஏழு லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது. மாதந்தோறும் 16 ஆயிரம் ரூபாய் தவணையாய் செலுத்தி வந்த நிலையில், வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடந்த ஆறு மாதங்களாக தவணையை செலுத்த முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், கடன் தொகையை திருப்பி செலுத்தக் கோரி இருதயராஜை வங்கி ஊழியர்கள் தொல்லை கொடுத்து மிரட்டல் விடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த இருதயராஜ், வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து உடலை மீட்ட போலீசார், அவர் இறுதியாக எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்