துடிதுடித்து இறந்த இளைஞர்... பள்ளியில் உடலுடன் உறவினர்கள் முற்றுகை
சென்னையை அடுத்த ஆலந்தூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் உடலுடன் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர் மடுவின்கரை பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்பவர்
அங்குள்ள ஒரு பள்ளியில் ஒலிபெருக்கி அமைக்கும்
பணிக்கு சென்ற போது மின்சாரம் தாக்கியதால்
மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக
மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ஜார்ஜ்
உயிரிழப்புக்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என
கூறி ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட ஜார்ஜ்
உடலுடன் உறவினர்கள் பள்ளியை முற்றுகையியிட்டு
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு
ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய
நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து
அனைவரும் கலைந்து சென்றனர்.