"நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 14வயது சிறுமி உயிரிழப்பு" - சென்னையை அதிர வைத்த பயங்கரம்

Update: 2023-12-10 04:39 GMT

சென்னையில், ஆர்.கே நகரில் நடைபெற்ற அதிமுக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி, 14வயது சிறுமி உயிரிழந்தாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கொருக்குப்பேட்டை, எழில் நகர் பகுதியில் இன்று காலை அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சிலருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிவிட்டு பின்னர் புறப்பட்டு சென்றார். பின்னர் நலத்திட்ட உதவிகளை வாங்க அங்கு 300க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அப்போது உறவினர்களுடன் நிவாரண பொருட்களை வாங்க வந்த சிறுமி ஒருவர் ஓரமாக நின்றபோது, திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அருகில் இருந்த காவலர்கள், சிறுமியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆர்.கே நகர் போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த சிறுமி தண்டையார்பேட்டையை சேர்ந்த 14வயதான யுவஸ்ரீ என்பது தெரியவந்தது. தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி, பள்ளி விடுமுறை என்பதாலும், பெற்றோர், 100நாள் வேலை திட்டத்திற்கு சென்ற நிலையில், உறவினர்களுடன் நலத்திட்ட உதவி வாங்க வந்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்